சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அசையும் சொத்துக்கள், அசையாக சொத்துக்கள், சேமிப்பு, கடன் உள்ளிட்ட அனைத்து சொத்து விவரங்களையும், வரும், அக்டோபர், 31ம் தேதிக்குள், தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
வேறு யார் பெயரிலும், அரசு ஊழியர்கள் சொத்துக்கள் வாங்கியிருந்தாலும், அவற்றையும் குறிப்பிட்டு, அந்த நபருக்கும், அரசு ஊழியருக்கும் என்ன உறவு என்பதையும் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து மதிப்புகளை தாக்கல் செய்யும் அரசு ஊழியர்கள் பெயர்கள் தான், அவர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம் பெறும் என்றும்
சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதவர்கள், அரசு ஊழியர்களுக்கான நன்னடத்தை விதியை மீறியதாகவும் கருதப்படும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
