Make in India மீது மோகம் : சீனாவுக்கான இந்திய ஏற்றுமதி 39% அதிகரிப்பு

Estimated read time 1 min read

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக அளவு, நடப்பாண்டின் முதல் பாதியில் 92 பில்லியன் டாலரை எட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக சீன மக்கள் குடியரசின் துணைத் தூதர் கின் ஜியே தெரிவித்துள்ளார். இந்தியாவின் இந்த ஏற்றுமதி சாதனை குறித்த ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த செப்டம்பரில் டெல்லியில் இந்தியா தலைமையேற்று நடத்திய பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது, சீன அதிபர் ஷி ஜின்பிங்க்- பிரதமர் மோடி இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பு வர்த்தக பொருளாதார உறவுகள் மேம்பாடு குறித்து கூறப்பட்டது.

இந்நிலையில் மும்பையில் உள்ள சீன மக்கள் குடியரசின் துணைத் தூதர் கின் ஜியே, இரு நாடுகளும் ஒன்றையொன்று “கூட்டாளிகளாகவும் வாய்ப்புகளாகவும்” கருத வேண்டும் என்றும், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் மூலம் கருத்து வேறுபாடுகளைத் தீர்க்கப் பணியாற்ற வேண்டும் என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில், 6.93 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்த சீனா இந்த ஆண்டு 9.64 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இது 38.71 சதவீத வளர்ச்சியாகும்.

இந்தியாவின் இந்த அதிரடி ஏற்றுமதி வளர்ச்சிக்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பொறியியல் துறைகளே முக்கிய பங்கு வகுத்துள்ளன.

Make in India திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் Printed Circuit Boards உள்ளிட்ட ஸ்மார்ட் போன் உதிரி பாகங்களையும், பொறியியல் துறை சார்ந்த பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், இரும்புத் தாது மற்றும் ரசாயனங்களையும் பெருமளவில் சீனா இறக்குமதி செய்துள்ளது.

சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 39 சதவீதம் அதிகரித்திருந்தாலும் சீனாவுடனான ஒட்டுமொத்த Trade Imbalance எனப்படும் வர்த்தக சமநிலையின்மை இன்னும் பெரும் சவாலாகவே உள்ளது.

இதே 5 மாத காலத்தில், சீனாவிலிருந்து இந்தியா செய்த இறக்குமதியும் 27 சதவீதம் அதிகரித்து 65.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனா போன்ற ஒரு பெரிய உற்பத்தி சந்தைக்கு இந்தியா தனது மதிப்பு கூட்டப்பட்ட மின்னணு மற்றும் பொறியியல் பொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்திருப்பது நாட்டின் உற்பத்தித் துறையின் தரம் சர்வதேச அளவில் வளர்ந்திருப்பதையே காட்டுகிறது.

வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் ஒன்றிணைந்து அதிக நிதி சுதந்திரத்தையும் கூட்டு வளர்ச்சியையும் வளர்ப்பதால், உற்பத்தி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளின் இதயமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

வழக்கமான மேற்கத்திய விநியோக சங்கிலிகள் மீதான தங்களின் அதிகப்படியான சார்பைக் குறைத்துக்கொண்டு, நிலையான வர்த்தக கூட்டாண்மைகளுக்காக பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் பெரும்பாலும் இந்தியாவையே நாடுகின்றன.

இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்தித் துறைகள் வளர்ச்சி அடைந்துளளது. மேலும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடைப்பிடித்த கடுமையான தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சரியான நேரத்திலான விநியோக நெறிமுறைகள் மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விலை நிர்ணய உத்திகளே இந்த வெற்றிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

மேலும், உற்பத்தித் தடைகளைத் தளர்த்துதல், துறைமுக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுங்க அனுமதிகளை நெறிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அரசாங்கத்தின் முயற்சிகள், சர்வதேச சரக்கு அனுப்பீடுகளுக்கான கால அளவை வெகுவாகக் குறைத்துள்ளன.

அதிகரித்து வரும் உள்நாட்டுச் செயல்பாட்டுச் செலவுகள் மற்றும் விநியோகச் சங்கிலி பிரச்சனைகளுடன் சீனா போராடி வரும் நிலையில், ஆசியாவின் மிகவும் நம்பகமான, அதிகத் திறன் கொண்ட மாற்றுப் ஏற்றுமதியாளராக இந்தியா தன்னை வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.

உலகளாவிய விநியோகச் சங்கிலியின் உறுதித்தன்மைக்கான எதிர்காலம் இந்திய மண்ணிலேயே உறுதியாக அமைந்துள்ளது என்பதை உணர்ந்து, சர்வதேச முதலீட்டாளர்களும் உலகளாவிய நிறுவனங்களும் இந்தியா மீது கண் வைத்துள்ளனர்.

இந்த வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் இந்தியா சர்வதேச வர்த்தக மன்றங்களில் தனது நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் வல்லமையுடன் விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் 1 டிரில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை நோக்கிச் செல்லும் இந்தியா 2030-3- ல் 2 டிரில்லியன் டாலர் என்று இலக்கையும், 2047க்குள் ஒட்டுமொத்த ஏற்றுமதியை 7.9 டிரில்லியன் டாலராக உயர்த்தவும், உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கை 10 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

அடுத்த தலைமுறைகளுக்கு வளம் மற்றும் தடையற்ற பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட ஒரு பொற்காலத்தைப் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி செய்துள்ளது.

You May Also Like

More From Author