உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு 12ஆம் நாள், ஜெனீவாவில் அமைந்துள்ள தலைமையகத்தில் நடைபெற்ற விருது வழங்குதல் விழாவில் முதலாவது புதுமையான நகரம் எனும் விருதை வென்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டது. இறுதி பட்டியலில் இடம்பெற்ற 15 நகரங்களிலிருந்து ஷாங்காய் மாநகரம் உள்ளிட்ட 3 நகரங்கள் இவ்விருதை வென்றன.
2026ஆம் ஆண்டில், புதுமையான நகரம் எனும் விருதை இவ்வமைப்பு வழங்குவது முதல்முறை. அடுத்தாண்டிற்குள், புத்தாக்கம் செய்வதை விரைவுபடுத்துவதற்கு மாபெரும் வாக்குறுதிகளை அளிக்கும் நகரங்களை ஊக்குவிப்பது என்பது இவ்விருதின் நோக்கமாகும். சர்வதேச அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைக்கான முக்கிய தகுநிலையை வலுப்படுத்துவதோடு, புதுமை மற்றும் படைப்பாற்றல் ரீதியில் மேலும் பரந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பது என்பது ஷாங்காய் மாநகரின் தொலைநோக்கு எதிர்பார்ப்பாகும்.
ஷாங்காய், பெல்ஜியத்தின் சலரோவா, பிரிட்டன் லிவர்பூல் ஆகிய 3 நகரங்கள் இவ்விருதை வென்றன.
