அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய கமிட்டியின் பொறுப்பாளருடன் ஹெ லிஃபெங் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமையமைச்சருமான ஹெ லிஃபெங், 12ஆம் நாள் பெய்ஜிங்கில் அமெரிக்க-சீன உறவுக்கான தேசியக் கமிட்டி இயக்குநர் குழுவின் நிர்வாகத் துணைத் தலைவர் கிரீன்பெர்க் தலைமையிலான குழுவுடன் சந்திப்பு நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், சீனாவும் அமெரிக்காவும், இருநாட்டு அரசுத் தலைவர்களும் எட்டிய முக்கிய ஒருமித்த கருத்துகளை செயல்படுத்தி, இருநாட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கும், உலகப் பொருளாதாரத்துக்கும், மேலதிக நிலைத்தன்மையைச் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். சீன-அமெரிக்க பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு அமெரிக்க-சீன உறவுக்கான தேசிய கமிட்டி தொடர்ந்து ஆக்கபூர்வமாக பங்களிக்கும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

 

You May Also Like

More From Author