இலகுரக மற்றும் நெசவுத் தொழிற்துறை வளர்ச்சிக்கான 15வது ஐந்தாண்டுத் திட்டம் வெளியீடு

இலகுரக மற்றும் நெசவுத் தொழிற்துறை வளர்ச்சிக்கான 15வது ஐந்தாண்டுத் திட்டத்தை, சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உள்ளிட்ட மூன்று துறைகள் அண்மையில் வெளியிட்டன.

இத்திட்டத்தின்படி, 2030ஆம் ஆண்டு வரை இத்தொழிற்துறை அறிவுசார் மயமாக்கல், பசுமை மயமாக்கல், ஒருங்கிணைப்பு மயமாக்கல் ஆகியவற்றின் வளர்ச்சியை தொடர்ந்து முன்னெடுக்கவும், வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய தொழில் நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பின் ஆண்டுக்கு சராசரி வளர்ச்சி விகிதம் நியாயமான வரம்பிற்குள் இருக்கவும், உலகளாவிய தொழில் மற்றும் மதிப்புச் சங்கிலிகளில் இத்துறையின் நிலையை உயர்த்தவும் வேண்டும்.

மேலும், 2030ஆம் ஆண்டு வரை இத்தொழிற்துறையின் டிஜிட்டல் உற்பத்தி உபகரணங்களின் பயன்பாட்டு விகிதம் 63 சதவீதத்துக்கு மேல் இருப்பது, பசுமைத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2000க்கு மேல் அதிகரிப்பது உள்ளிட்ட 11 முக்கிய இலக்குகளையும் இத்திட்டம் நிர்ணயித்துள்ளது.

You May Also Like

More From Author