உச்ச நீதிமன்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நவ.28ம் தேதி தீபம் ஏற்ற உத்தரவிட்டு உள்ளது.
தலைமை செயலாளர், டிஜிபி, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் உள்ளிட்டோருக்கு நீதிமன்ற அவமதிப்பு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பி உள்ளது. அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், கோவில் நிர்வாகம் ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.இந் நிலையில் பிரதமர் மோடியும் தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார்.
ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த வாழ்த்தை பிரதமர் மோடி பகிர்ந்து இருக்கிறார்.
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
— Narendra Modi (@narendramodi) November 27, 2026
Vetrivel Muruganukku Arogara!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
— Narendra Modi (@narendramodi) November 27, 2026
