ஐ.நாவின் கடல் சார்ந்த சட்டத்தின் விதிகளை அமெரிக்கா அத்துமீறி, சர்வதேசக் கடல் ஒழுங்குமுறையைச் சீர்குலைத்துள்ளது என்று இச்சட்டத்தின் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஐ.நாவுக்கான சீன துணை நிரந்தர பிரதிநிதி கெங்சுவாங் 25ஆம் நாள் குறைக்கூறினார்.
இச்சட்டத்தை அங்கீகரிக்க மறுத்த அமெரிக்கா பிற நாடுகள் இச்சட்டத்தை நடைமுறையாக்கும் நிலைமை பற்றி திரித்துப்பேச விரும்புகின்றது. இச்சட்டத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் அதேவேளையில் சிறிது பங்கு ஆற்ற இது விரும்பவில்லை என்று கெங்சுவாங் தெரிவித்தார்.
ஐ.நாவின் கடல் சார்ந்த சட்டத்தை சீனா உறுதியாகக் கடைபிடித்து வருகின்றது. இச்சட்டத்தை மீறுவதை எதிர்ப்பதுடன், குறிப்பிட்ட நோக்கத்துக்குச் சாதகமான ஆதாரங்களுக்காகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதையும் எதிர்க்கின்றது என்றும் அவர் தெரிவித்தார்.