பொதுமக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே, இணையவழியில் எங்கிருந்தும் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் ‘வருகை இல்லா ஆவணப்பதிவு’ திட்டத்திற்கு நிர்வாக ரீதியான ஒப்புதல் வழங்கி தமிழக அரசு தற்பொழுது அரசாணை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் துறை ரீதியான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இத்திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இனி ரிஜிஸ்டர் ஆபீஸ் போக தேவையில்லை, ‘எங்கிருந்தும் பத்திரப்பதிவு’: தமிழக அரசு அரசாணை வெளியீடு
