சீன-ஓமன் வெளியுறவு அமைச்சர்களின் தொடர்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, ஜூன் 18ஆம் நாள், அழைப்பின் பேரில், ஓமன் வெளியுறவு அமைச்சர் பாதேலுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது பாதேல் கூறுகையில், ஈரான் மீது இஸ்ரேல் வெளிப்படையாக தாக்குதல் நடத்துவது, ஐ.நா சாசனத்திற்குப் புறம்பானது என்பதோடு, சர்வதேசச் சட்டத்தையும் மீறியது எனக் குறிப்பிட்டார். மேலும், இத்தாக்குதல் ஈரானின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தில் அத்துமீறி நடத்தப்படும் ஒன்று என்றும் தற்போதைய நிலைமை குறித்து ஓமன் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வாங்யீ  கூறுகையில், எல்லா சர்ச்சைகளையும் அமைதி வழி தீர்ப்பதில் சீனா எப்போதும் ஊன்றி நின்று வருகிறது. அதோடு, ஆயுத ஆற்றலைப் பயன்படுத்துவதற்குச் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது என்றார்.

You May Also Like

More From Author