சீனாவின் சேவை வர்த்தகம் 2025ஆம் ஆண்டு முற்பாதியில் நிதானமாக அதிகரித்து காணப்பட்டது. சேவையின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 3 லட்சத்து 88 ஆயிரத்து 726 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 8 விழுக்காடு அதிகரித்தது. சேவை வர்த்தக பற்றாக்குறை 51 ஆயிரத்து 66 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இதே காலத்தில் இருந்ததை விட 15 ஆயிரத்து 221 கோடி யுவானைக் குறைந்தது.
மேலும், அறிவாற்றல் செறிவான சேவை வர்த்தகமும் அதிகரித்துள்ளது. முதல் 6 மாதங்களில், அறிவாற்றல் செறிவான சேவையின் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 1 லட்சத்து 50 ஆயிரத்து 254 கோடி யுவானை எட்டி, 6 விழுக்காடு அதிகரித்தது.
தவிரவும், சுற்றுலா சேவை ஏற்றுமதி உயர்வேகமாக அதிகரித்து வருகிறது. முற்பாதியில் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி தொகை 1 லட்சத்து 8 ஆயிரத்து 29 யுவானை எட்டி, 12.3 விழுக்காடு அதிகரித்தது.