கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 19 மற்றும் பிப்ரவரி 20
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்.
பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 23 வரை
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்