தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இறுதியாக தங்கள் நீண்டகால ஐசிசி பட்ட வறட்சியை முறியடித்து, லார்ட்ஸில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றது.
இந்த வெற்றி 27 ஆண்டுகளில் அவர்களின் முதல் ஐசிசி கோப்பையாகும். இதன் மூலம், 1999, 2003, 2015, 2022 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பல தசாப்தங்களாக இருந்த மனவேதனைகளை துடைத்தெறிந்தது.
மேலும் உலக அரங்கில் அவர்களை சோக்கர்ஸ் என்று நீண்ட காலமாக முத்திரை குத்திய விமர்சகர்களை மௌனமாக்கியது.
சோக்கர்ஸ் என்பது ஒரு அணி வலிமையாக இருந்தாலும், முக்கியமான தருணங்களில் சொதப்பிவிடுவதோ அல்லது வாய்ப்புகளை இழப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர்களைக் குறிக்கும்.
27 ஆண்டு ஐசிசி கோப்பை வறட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது தென்னாப்பிரிக்கா
