வரும் டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறவுள்ள 23வது இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கிய ராணுவ தளவாட ஒப்பந்தத்தை ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபை அங்கீகரிக்கத் தயாராகி வருகிறது.
‘தளவாடங்களின் பரஸ்பர பரிமாற்றத்திற்கான ஒப்பந்தம்’ (Reciprocal Exchange of Logistics Agreement – RELOS) என்பது, இரண்டு மூலோபாய கூட்டாளிகளாக இருக்கும் ரஷ்யா-இந்தியாவிற்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இந்த ஒப்பந்தம் பிப்ரவரி 18, 2025 அன்று மாஸ்கோவில் கையெழுத்தானது. இந்த RELOS ஒப்பந்தம், இரு நாடுகளின் கூட்டு ராணுவப் பயிற்சிகள், பேரிடர் நிவாரணம் மற்றும் பிற ராணுவ நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பை எளிதாக்க உதவும்.
புடினின் வருகைக்கு முன் இந்தியாவுடனான முக்கிய ராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கிறது ரஷ்யா
