ஃபூஜியானின் வளர்ச்சி அதிர்ச்சி: போட்ஸ்வானாவின் அரசுத் தலைவர்

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் அழைப்பின் பேரில், அக்டோபர் 12 முதல் 17ஆம் நாள் வரை சீனாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போட்ஸ்வானாவின் அரசுத் தலைவர் டுமா பொகோ, சீன செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், முன்பு ஃபூஜியான் மாநிலம் பெரும் வளர்ச்சி அடையவில்லை. தற்போது, வறுமை நிலையிலிருந்து மீண்டு வளர்ச்சி நிலைக்கு மாறியது, இது ஒரு குறுகியகால சாதனையாகும். சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஃபூஜியான் மாநிலத்தில் பதவி ஏற்ற 17.5 ஆண்டுகளில், இப்பிரதேசத்தின் வளர்ச்சியைப் பெரிதும் முன்னேற்றியுள்ளார். போட்ஸ்வானா-சீன உறவு பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவாக மாறியுள்ளது. இதன் மூலம், இரு நாட்டு ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்க-சீன உறவு ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து, கூட்டு வெற்றி பெறுவதானது. இரு தரப்புகள் தனிச்சிறப்பான முறையில் ஒன்றுக்கு ஒன்று உதவி செய்து வருகின்றன என்று கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author