சீன-அமெரிக்க தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு

சீனத் தேசியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் டுங் ஜுன், அமெரிக்க தேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஹெக்செஸ் ஆகியோர் அக்டோபர் 31ம் நாள் காலை மலேசியாவில் சந்திப்பு நடத்தினர்.

அப்போது டுங் ஜுன் கூறுகையில், தென்கொரியாவில் நடைபெற்ற சீன மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு, சீன-அமெரிக்க உறவின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு நெடுநோக்கு வழிகாட்டலை அளித்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளும் கூட்டுச் செழுமையைப் பெறலாம்.  இரு நாட்டின் பாதுகாப்புத் துறைகள், இரு தலைவர்களின் ஒத்தக் கருத்துகளை சரியாக நடைமுறைப்படுத்தி, உயர்நிலை நெடுநோக்கு தொடர்பின் முன்மாதிரியை வெளிக்கொணர வேண்டும். சமத்துவ மதிப்பு, சமாதான சகவாழ்வு, நிதானம் ஆகியவை கொண்ட இரு நாட்டின் ராணுவ உறவை உருவாக்கி, முன்னேறி வரும் சீன-அமெரிக்க உறவுக்கு ஆதாரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தைவான் நீரிணை இரு கரை ஒன்றிணைப்பு, தடுக்கப்பட முடியாத போக்காகும். இப்பிரச்சினையில் தைவான் சுதந்திரத்துக்கு அமெரிக்கா தெளிவான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். அமெரிக்கா, சீனாவுடன் இணைந்து, பிராந்திய மற்றும் உலகின் அமைதிக்கு நேர்மறை சக்தியை ஊட்ட வேண்டும் என்றும் டுங் ஜுன் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author