தேனிசை தென்றல் தேவா உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
https://youtu.be/cdtWvTeJ3T0?is=aef3YD2vfstrrjNW
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மற்றும் பாடகரான தேவா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தேவா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர். மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. 1990-ம் ஆண்டு வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பல கானா பாடல்களை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார். அவருடைய கானா பாடல்கள் இளசுகளை ஆட்டம் போட வைத்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த தேவா மறைவுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து நேரிலும் அஞ்சலி செலுத்தினர்.
தேனிசை தென்றல் தேவா உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்வர் விஜய், அறிவித்த நிலையில், ராணிப்பேட்டை அடுத்த சக்கரமல்லூரில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேனிசைத் தென்றல் தேவா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
