“மனுஷன் மாதிரியே ரோபோவுக்கும் பதற்றம் வந்துடுச்சோ?”

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறை உலக அளவில் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இந்த நவீன காலத்தில், அதிநவீன மனித உருவ ரோபோ ஒன்று வெள்ளரிக்காயை நறுக்க முடியாமல் கைகள் நடுங்கித் தவிக்கும் விசித்திரமான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சிரிப்பலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்களின் கடினமான வேலைகளை எளிதாக்க உருவாக்கப்படும் ரோபோக்கள், சமையலறைப் போன்ற எளிய வேலைகளில் தடுமாறுவதைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைச் நகைச்சுவையாகப் பதிவிட்டு வருகின்றனர். சம்பவத்தன்று ஆய்வகம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த அந்த ரோபோவிடம் கத்தியும் வெள்ளரிக்காயும் கொடுக்கப்பட்டு அதைத் துண்டு துண்டாக நறுக்குமாறு கட்டளையிடப்பட்டது.

ஆனால் மனிதர்களைப் போல லாவகமாகச் செய்ய முடியாமல், அந்த ரோபோவின் கைகள் பயந்தது போல் நடுங்கத் தொடங்கியதுடன், காய்கறியைக் சரியாக நறுக்க முடியாமல் தட்டுத்த தடுமாறியது. இதைப் பார்த்த அங்கிருந்த ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நெட்டிசன்கள், புது வேலைக்கு வந்த மனிதன் பதற்றமடைவது போல் இந்த ரோபோவும் பயந்து நடுங்குகிறது என்று கலாய்த்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித மூளையை மிஞ்சும் அளவிற்கு வளர்ந்துவிட்டதாகப் பலரும் கூறி வரும் சூழலில், அன்றாட வாழ்க்கையில் நாம் மிக எளிதாகச் செய்யும் சிறு காரியங்களைக் கூட ரோபோக்களால் சரியாகச் செய்ய முடியாது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அறிவியல் துறையில் எத்தனை முன்னேற்றங்கள் வந்தாலும், மனிதர்களின் கைவண்ணத்திற்கும் இயல்பான திறமைக்கும் ஈடாக எந்த எந்திரத்தாலும் செயல்பட முடியாது என்பதை இந்த வைரல் வீடியோ மீண்டும் ஒருமுறை நகைச்சுவையாக நிரூபித்துள்ளது.

“>

Please follow and like us:

You May Also Like

More From Author