நமது நாட்டின் பொதுச் செயல்பாடுகளிலும், அவற்றை முன்னெடுத்துச் செல்பவர்களின் சிந்தனைகளிலும் சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தைக் காண முடிகிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரின் தான்டோலி பகுதியில், சர்வ சார்வஜனிக் துர்கா பூஜை பந்தலுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் நேரில் சென்று, அன்னை துர்கைக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் பேசிய அவர், உலகில் நிகழும் அனைத்திற்கும் இறைத்தாயின் அருள் காரணம் என்றும், சக்தியே அனைத்தையும் சாத்தியமாக்குகிறது எனவும் கூறினார். உன்னதமான நற்பண்புகள் ஒவ்வொருவருக்குள்ளும் உள்ளதாகக் கூறிய அவர், அவற்றை விழித்தெழச் செய்வதே நமது கடமை என குறிப்பிட்டார். சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் இன்றும் நாட்டின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் மோகன் பாகவத் தெரிவித்தார்.
