ஹெபெய் மாநிலத்தின் சியோங்ஆன் புதிய பிரதேசத்தில் சீன தேசிய தரவுக் குழுமம் அக்டோபர் 20ஆம் நாள் நிறுவப்பட்டது. தரவு வள வளர்ச்சி மற்றும் பயன்பாடு தனது முக்கிய பொறுப்பாகக் கொண்ட நடுவண் அரசு சார் நிறுவனமான இக்குழுமத்தின் தலைமையகம் ஹெபெய் சியோங்ஆன் புதிய பிரதேசத்தில் உள்ளது.
தரவுப் பயன், தொழிற்துறை, சூழல் ஆகியவற்றை மேம்படுத்துவது இக்குழுமத்தின் நோக்கமாகும். மேலும், தேசிய நிலையில் தரவுக் குழுமத்தை நிறுவுவது, உலகளவில் முன்மாதிரியாகும். உலக தரவு வளப் போட்டியில் சீனாவின் தகுநிலையை உயர்வதற்கு இது துணை புரியும்.
