புதிய யுகத்தில் சமூகப் பணியின் உயர்தரமான வளர்ச்சியை மேம்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார். அண்மையில் சமூகப் பணி குறித்து முக்கிய உத்தரவிட்ட போது அவர் கூறுகையில்,
சமூகப் பணி என்பது கட்சி மற்றும் நாட்டின் பணிகளில் முக்கிய பகுதியாகும். கட்சியின் நீண்டகால ஆட்சி, நாட்டின் நிலையான அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் நிலைப்புத்தன்மை, மக்கள் நல்வாழ்வு ஆகியவற்றுக்கு அது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
தற்போது, புதிய பொருளாதார அமைப்புகள், புதிய சமூக அமைப்புகள் உள்ளிட்ட புதிய துறைகளின் விரைவான வளர்ச்சியுடன், சீனாவின் சமூக கட்டமைப்பில் ஆழமான மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாறி வரும் சூழலில், சமூகப் பணியில் புதிய கடமைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில், சமூகப் பணிகள் பற்றிய மாநாடு ஒன்று பெய்ஜிங்கில் நடைபெற்றது என்று தெரியவந்துள்ளது.