கலாசாரப் பாரம்பரிய பாதுகாப்பு பற்றிய புதிய சட்டத்தை வகுக்கும் சீனா

கலாசாரப் பாரம்பரியத்தைச் சிறப்பாகப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்கும் பொருட்டு, கலாசாரப் பாரம்பரிய பாதுகாப்பு சட்டத்தின் உருவாக்கத்தை முன்னெடுத்துச் செல்ல சீனா பணியாற்றும் என்று கலாசார மற்றும் அறநெறி முன்னேற்றத்துக்கு வழிகாட்டும் மத்திய ஆணையத்தின் பொது அலுவலகத்தின் துணை இயக்குநர் ஹு காய்ஹோங் அக்டோபர் 20ஆம் நாள் தெரிவித்தார்.

15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தின் துவக்கம் பற்றி சீன அரசவையின் தகவல் தொடர்பு பணியகம் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறுகையில், கடந்த செப்டம்பரில் சீனா வெளியிட்ட கலாசார பாரம்பரிய பாதுகாப்புக்கான முதல் ஐந்தாண்டு திட்டத்தில் இந்நடவடிக்கை சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், இந்நடவடிக்கையின் மூலம் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, கலாசார பாரம்பரியத்தின் பயன்பாட்டை மேம்படுத்துவதோடு, குறைந்தபட்ச தலையீட்டுக் கொள்கையைக் கடைப்பிடித்து, முறையான பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த மேற்பார்வையை சீனா வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author