சீனாவின் ட்சிங்தாவ் நகரில் TP1000 என்ற சரக்கு ட்ரோன், 1 டன் சுமை சுமந்து, தனது முதலாவது சோதனஐப் பயணத்தை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளது.
புத்தாக்கத்துடன் கூடிய இந்த சரக்கு ட்ரோன், வான்வழியாக பொருள்களை விநியோகிக்கும் திறன்களைக் கொண்ட நாட்டின் முதலாவது பெரிய ஆளில்லா விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய சரக்கு ட்ரோன்களுக்கான சீனாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் தர வரையறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள இது, முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட TP500 ட்ரோன்களை விட அதிக சுமைகளை சுமக்கும் திறனையும் அதிகபட்சமாக எடையுடன் ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும் திறனையும் கொண்டுள்ளது.
குறைந்த உயரத்தில் சரக்குப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் இத்தகைய ட்ரோன்களின் அறிமுகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மிக முக்கியமாக, ஸ்மார்ட் ஏர்டிராப் தொழில்நுட்பத்துடன் கூடிய TP1000 ட்ரோன்களானது அவசரகால உதவிகள் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.