சீனக் கடற் காவற்துறை அறிவிப்பின் படி, ஜூன் 17ஆம் நாள் பிலிப்பைன்ஸ் அனுப்பிய ஒரு வினியோகப் படகு மற்றும் இரண்டு படகுகள் சீனாவின் நான்ஷா தீவுகளின் ரென்ஏய் ஜியவோ பகுதிக்கு அருகிலுள்ள நீரில் சட்டவிரோதமாக நுழைந்து, சட்டவிரோதமாக தரை தட்டியுள்ள போர்க்கப்பலுக்குப் பொருட்களை வழங்க முயன்றன.
சீனக் கடற்காவற்துறை சட்டத்தின் படி பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு எதிராக கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இச்செயல், நியாயமான, சட்டபூர்வமான மற்றும் தொழில்முறையானது. கடற் காவற்துறையின் நிர்வாக சட்ட அமலாக்க நடைமுறைகள் குறித்த விதிமுறைகளைச் சீனா செயல்படுத்துவதன் பின்னணியில் பிலிப்பைன்ஸ் நடத்திய ஆத்திரமூட்டும் நடவடிக்கை அதிகரித்து வருகிறது.
சீனாவின் கடல்சார் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத்தை பிலிப்பைன்ஸ் மீற முயன்றால், எதிர் நடவடிக்கைகளை உறுதியாக எடுக்கப்படுவது உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடல் பிரச்சினையில், சீனாவின் நிலைப்பாடு எப்போதும் தெளிவாக உள்ளது. நேரடியான தொடர்புடைய நாடுகளுடன் தொடர்பான முரண்பாடுகள் மற்றும் கருத்து வேற்றுமையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்க வேண்டும். அதே நேரத்தில், கடல்சார் மீறல்களின் எந்தவொரு ஆத்திரமூட்டும் செயல்களையும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.
இது சீனாவின் கடல் உரிமை மற்றும் நலன்களின் நியாயமான பாதுகாப்பு மட்டுமல்ல, பிரதேசங்களின் அமைதி மற்றும் நிதானத்துக்கான ஆதரவும் ஆகும். பிலிப்பைன்ஸில் சிலருக்கு பல உத்திகள் இருந்தாலும், அவை உறுதியாக தோள்வியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.