நூலகம்

Estimated read time 0 min read

Web team

maxresdefault.jpg

நூலகம் ஒர் ஆலயம் அல்ல கவிஞர் இரா .இரவி

நூலகம் ஒர் ஆலயம் அல்ல அல்ல
அதற்கும் மேலான ஒர் சொல் தேடுகின்றேன்

ஆலயத்தில் வேற்று மதத்தவருக்கு அனுமதி இல்லை
நூலகத்தில் எந்த மதத்தவருக்கும் அனுமதி உண்டு

ஆலயத்தில் சாதிச் சண்டைகள் நடந்தது உண்டு
நூலகத்தில் சாதிச் சண்டைகள் நடப்பது இல்லை

ஆலயத்தில் சில சாதியினரை அனுமதிப்பது இல்லை
நூலகத்தில் எல்லாச் சாதியினருக்கும் அனுமதிஉண்டு

ஆலயத்தில் மற்ற ஆலயத்தினர் வந்து இடிப்பது உண்டு
நூலகத்தில் மற்ற நூலகத்தினர் வந்து இடிப்பது இல்லை

ஆலயத்தில் கருவறையில் உயிர்சாதிக்கு மட்டுமே அனுமதி
நூலகத்தில் எந்த சாதியினரும் எங்கும் செல்லாம்

ஆலயத்தில் தரும் பிரசாதம் மதக் குறியீடுகள்
நூலகத்தில் தரும் நூல்கள் அறிவின் குறியீடுகள்

ஆலயத்தில் பூட்டி விட்டு சண்டைகள் நடப்பது உண்டு
நூலகத்தில் பூட்டி விட்டு சண்டைகள் நடப்பது இல்லை

ஆலயத்தில் சிலைகள் நகைகள் கொள்ளை நடப்பதுண்டு
நூலகத்தில் நூல்கள் கொள்ளை என்றும் நடப்பதே இல்லை

ஆலயத்தில் உள்ள கடவுள்கள் நம்மோடு பேசுவது இல்லை
நூலகத்தில் உள்ள நூல்கள் நம்மோடு உறவாடுவது உண்டு

கோயில் தேவாலயம் பள்ளிவாசல் பலசொற்கள் உண்டு
நூலகம் என்ற ஒற்றைச் சொல்லே எங்கும் உண்டு

இந்துக்களின் புனித இடம் ராமேஸ்வரம் என்பார்கள்
இஸ்லாமியர்களின் புனித இடம் நாகூர் தர்கா என்பார்கள்

கிறித்தவர்களின் புனித இடம் வேளாங்கண்ணி என்பார்கள்
எலோருக்கும் புனிதமான இடம் நூலகம் என்பேன் நான்

நூலகம் என்பது ஆலயம் அல்ல அல்ல
அதையும் தாண்டிப் புனிதமானது நூலகம்.

Please follow and like us:

You May Also Like

More From Author