அக்டோபர் 22ஆம் நாள் 11:30 மணியளவில், ரஷியாவுக்குச் சென்ற எக்ஸ் 8059 சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி, சீனாவின் ஷென் யாங் நகரிலுள்ள ஃபூஹே நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.
இது வரை, சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி சேவையின் மொத்தப் பயணங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்தை எட்டியுள்ளது. இப்பயணங்களின் மூலம் ஏற்றியிறக்கப்பட்ட மொத்த சரக்குப் பொருட்களின் மதிப்பு 56 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனத் தேசிய ரயில் குழுமம் வெளியிட்ட தரவுகளின்படி, சீன-ஐரோப்பிய சரக்குத் தொடர்வண்டி மூலம் சீனாவின் உள்நாட்டில் 132 நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சீனாவுக்கு அப்பால் ஐரோப்பாவில் 26 நாடுகளின் 237 நகரங்களும், ஆசியாவில் 12 நாடுகளின் 100க்கும் மேலான நகரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டியானது ஆசியா மற்றும் ஐரோப்ப முழுவதிலும் சேவை வழங்கி வருகின்றது.
