சென்னையில் கேலோ இந்தியா திறனறியும் போட்டி!

திறமையான இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில், கேலோ இந்தியா திறனறியும் போட்டி சென்னையில் நடைபெறுகிறது.

மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் கீழ் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் இன்று முதல் 27 -ம் தேதி வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

22-ம் தேதி தடகளம், 23 -ம் தேதி குத்துச்சண்டை, 24 -ம் தேதி வாலிபால், 25 -ம் தேதி கால்பந்து, 26 -ம் தேதி கபடி, 27 -ம் தேதி கோ-கோ ஆகிய விளையாட்டுகளில் திறமையானவர்களை தேர்வு செய்யப்படுவர்கள்.

You May Also Like

More From Author