2024ம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரை சீனாவின் சரக்கு புழக்கம் பற்றிய தரவுகளை சீன சரக்கு புழக்கம் மற்றும் கொள்வனவு சம்மேளனம் 29ஆம் நாள் வெளியிட்டது.
இத்தரவுகளின்படி, ஜனவரி முதல் நவம்பர் வரை சீனச் சமூகத்தின் சரக்கு புழக்கத்தின் மொத்த தொகை, 3 கோடியே 20 லட்சத்து 20 ஆயிரம் கோடி யுவானாகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.8 விழுக்காடு அதிகரித்தது. நவம்பர் திங்கள் சரக்கு புழக்கத்தின் அதிகரிப்பு விகிதம் 5.8 விழுக்காடாகும். இது, அக்டோபர் திங்களில் இருந்ததை விட 0.1 சதவீதப் புள்ளியை அதிகரித்துள்ளது.
சீன அரசின் பல கொள்கைகளின் நடைமுறையின் மூலம், தொழிற்துறை, நுகர்வு மற்றும் இறக்குமதி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி விரைவாகி, கட்டமைப்பு மேம்பாடு தொடர்கிறது. பாரம்பரிய தயாரிப்பு, உயர் தொழில் நுட்பத் தயாரிப்பு முதலிய துறைகள் மீட்சியடைந்து ஏற்றம் பெறும் போக்கு காணப்பட்டுள்ளது.