“கொடைக்கானலுக்கு இப்போதைக்கு வராதீங்க!”

Estimated read time 0 min read

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மலைப்பிரதேசமான கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மலைச் சாலைகளில் மண் சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதோடு, பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு முக்கிய எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் யாரும் கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி போன்ற மலைப் பகுதிகளுக்குச் சுற்றுலா வருவதைத் தற்காலிகமாகத் தவிர்த்திடுமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இயற்கை சீற்றங்கள் மற்றும் எதிர்பாராத விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, அவசியமின்றி யாரும் மலைப்பகுதிகளுக்குப் பயணம் மேற்கோள்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மழையின் தீவிரம் குறையும் வரை சுற்றுலாப் பயணிகள் இந்தப் பயணத் திட்டங்களைத் தள்ளிவைக்க வேண்டும் என்ற காவல் துறையின் இந்த எச்சரிக்கைச் செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

You May Also Like

More From Author