“அண்ணாமலை நீங்க ஆர்எஸ்எஸ் முகமூடிதானே?” SIR விவகாரத்தில் தவறு நடந்தபோது என்ன பண்ணிட்டு இருந்தீங்க….? மாணிக்கம் தாகூர் சராமாரி கேள்வி….!! 

SIR விவகாரம் தொடர்பாகத் தங்களைப் பார்த்துக் கேள்வி எழுப்பிய பாஜக தலைவர் அண்ணாமலைக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “SIR விவகாரத்தில் முன்பு காங்கிரஸ் தூங்கிக் கொண்டிருந்ததா என்று அண்ணாமலை கேட்கிறார்.

அப்படியானால் தவறு நடந்தபோது அண்ணாமலை என்ன செய்துகொண்டிருந்தார், தூங்கிக் கொண்டிருந்தாரா அல்லது அந்தத் தவறுக்குத் துணை சென்றாரா?” என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், “அண்ணாமலை இன்றும் ஒரு ஆர்எஸ்எஸ் முகமூடிதான்; அவர் கட்சி வேறு மாதிரி காட்டிக் கொண்டாலும், எப்பொழுதும் பாஜகவின் உண்மையான குரலாகவே ஒலிக்கிறார்” என்றும் அவர் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தமிழ்நாட்டில் பாஜக மற்றும் அதன் ஆதரவு சக்திகள் ஒரு தீய சக்தி போல வளர முயன்று வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், தமிழ்நாட்டின் மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு மண்ணில் பாஜகவின் மதவாத அரசியலும் சூழ்ச்சிகளும் எப்போதும் எடுபடாது என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் தங்களது நேரடி அரசியல் எடுபடாததால், தற்போது புதிய பேனர்கள் மற்றும் பெயர்களில் அவர்கள் மக்களை ஏமாற்ற வருவதாகவும், அவர்களின் அந்தப் போலியான முகத்தை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மதவாத சக்திகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் காங்கிரஸ் கட்சியின் இந்தப் பகிரங்க விமர்சனம், தற்போது தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author