சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ,22ஆம் நாள், பெய்ஜிங்கில், காங்கோ குடியரசின் வெளியுறவு அமைச்சர் பவுண்டாவுடன் சந்திப்பு நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில், இரு நாட்டின் அரசுத் தலைவர்களின் கூட்டு நெடுநோக்கு வழிகாட்டலின்படி, இரு நாட்டுறவை புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல சீனா விரும்புகிறது என்றார். அதோடு, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு கருத்தரங்கின் கூட்டு தலைமை நாடாகப் பொறுப்பேற்று, பெய்ஜிங் உச்சிமாநாட்டின் சாதனைகளை இரு தரப்பும் நடைமுறைப்படுத்தியுள்ளன. இது தொடர்பான ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி, சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்புக்கான புதிய சுற்று தரத்தையும் பயன்களையும் மேம்படுத்த இரு தரப்பும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
பவுண்டா கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்துள்ள உலகளாவிய முன்மொழிவுகளுக்கு ஆதரவளித்து, ஒரே சீனா கோட்பாட்டைக் காங்கோ குடியரசு உறுதியாகப் பின்பற்றும் என்றார்.
