2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டம் துவக்கம்

Estimated read time 1 min read

2026 உலக ஆட்சிமுறை மன்றக் கூட்டம் 23ஆம் நாளிரவு ஹெபெய் மாநிலத்தின் சியோங்ஆன் பிரதேசத்தில் துவங்கியது. நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் சீரமைப்பு: உலக ஆட்சிமுறையை மேம்படுத்தும் நூற்றாண்டு கால மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பிலான இக்கூட்டத்தில், 90க்கும் மேலான நாடுகளின் அரசியல் துறை, நெடுநோக்கு துறை, கல்வித் துறை, தொழில் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்தவர், இளம் தலைவர்கள் உள்பட சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். சீர்திருத்தத்தின் மூலம் உலக ஆட்சிமுறையை மேம்படுத்தும் திட்டம் பற்றி அவர்கள் கூட்டாக விவாதித்தனர்.

துவக்க விழா, கூட்டத்தில் முழு அமர்வு உரைகள், 5 துணை மன்றங்களின் கீழ் 22 கருத்தரங்குகள் உள்பட பல நிகழ்ச்சிகள் முதலியவை 25ஆம் நாள் நீடிக்கும் இக்கூட்டத்தில் நடைபெற உள்ளன.
படம்:VCG

Please follow and like us:

You May Also Like

More From Author