தமிழகத்திற்கு விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் – காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

Estimated read time 1 min read

தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 60-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று, காவிரியில் வினாடிக்கு 3000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் நவம்பர் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கன அடி நீர் திறக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கோரிய நிலையில், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author