பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தீர்ப்பதற்கான சீனாவின் நிலைப்பாடு பற்றிய ஆவணம் வெளியீடு

பாலஸ்தீன-இஸ்ரேல் மோதலைத் தீர்ப்பதற்கான சீனாவின் நிலைப்பாடு பற்றிய ஆவணத்தை சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது.


இந்த மோதல் காரணமாக, அதிக அளவிலான பொது மக்கள் உயிரிழப்பு மற்றும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இது, கடுமையான மனிதநேய பேரிடரை விளைவித்துள்ளது. பன்னாட்டுச் சமூகம் இதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

தற்போதைய பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை குறித்து சீனாவின் நிலைப்பாட்டை சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பலமுறை விளக்கிக் கூறியதோடு, உடனடியாக போரை நிறுத்தி, மனிதநேய உதவிக்கான வழிகள் பாதுகாப்பாகவும் தடையின்றியும் இருப்பதை உறுதி செய்து, மோதல் அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் ‘இரு நாடுகள் தீர்வு’ஐ நடைமுறையில் கொண்டு வந்து, அமைதியை ஊக்குவிப்பதற்கான பன்னாடுகளின் ஒத்த கருத்தை எட்டி, கூடிய விரைவில் பாலஸ்தீன பிரச்சினைக்கு விரிவான நீதியான நிலையான தீர்வு காண்பது என்பது அதற்கான தீர்வு வழியாகும் என்று இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐ.நா.சாசனத்தின்படி, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணிக்காப்பதில் முதன்மை பொறுப்புகளை ஏற்கும் ஐ.நா. பாதுகாப்பு அவை, பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சினையில் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான பங்குகளை ஆற்ற வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, சீனா கீழ்கண்ட ஆலோசனைகளை வழங்குகிறது.


பன்முகங்களிலும் போரை நிறுத்த வேண்டும். பொது மக்களை பாதுகாக்க வேண்டும். மனிதநேய மீட்புதவிகளை உறுதி செய்ய வேண்டும். தூதாண்மை ரீதியான இணக்க முயற்சி எடுக்க வேண்டும்.

அரசியல் ரீதியான தீர்வு காண வேண்டும் ஆகிய 5 அம்சங்கள் இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Please follow and like us:

You May Also Like

More From Author