இங்கிலாந்தின் ஜனநாயக கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தேர்தல்களுக்கும் வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்கும் திட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரால் ஆதரிக்கப்பட்ட இந்த திட்டம், வாக்களிக்கும் உரிமைகளை ஒன்றிணைத்து தேர்தல் செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது, 16 மற்றும் 17 வயதுடையவர்கள் ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் அதிகாரப் பகிர்ந்தளிக்கப்பட்ட தேர்தல்களில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை ஆதரித்து, வேலை செய்து வரி செலுத்தும் இளைஞர்கள் நாடு எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதில் குரல் கொடுக்கத் தகுதியானவர்கள் என்று கூறினார்.
வாக்களிக்கும் வயதை 16 ஆகக் குறைக்கிறது பிரிட்டன்
