‘இந்தியா எங்களுக்கு முழுமையாக உதவியது;’ ஈரானியத் தூதர் முகமது ஃபதாலி பாராட்டு  

Estimated read time 1 min read

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் திரும்பும்போது, இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானின் ‘IRIS Dena’ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இந்தியா இதற்கு அளித்த ஒத்துழைப்பு குறித்து ஈரானியத் தூதர் முகமது ஃபதாலி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சனிக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா டுடே கான்க்ளேவ் 2026’ நிகழ்வில் பேசிய தூதர் முகமது ஃபதாலி, “இந்த விவகாரத்தில் இந்திய அரசு எங்களுக்கு உண்மையிலேயே உதவியது. எங்களது கோரிக்கையை ஏற்று அவர்கள் ஒத்துழைப்பு நல்கினார்கள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக வேறு சில நாடுகள் ஒத்துழைக்க மறுத்துவிட்டன.” என்று தெரிவித்தார்.
இதன் மூலம், இந்தத் தாக்குதல் நடந்ததால் எழுந்த தார்மீக விவாதங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

You May Also Like

More From Author