“டெட் தேர்வில் ஃபெயிலான 1.09 லட்சம் ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு” டிசம்பரில் அதிரடியாக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு…. குஷியில் அரசு ஆசிரியர்கள்….!! 

Estimated read time 1 min read

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின்படி, கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களும் ‘டெட்’ (TET) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, ஓய்வுபெற ஐந்தாண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், மற்ற அனைவரும் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்தத் தேர்வை எளிதில் எதிர்கொள்ள உதவும் வகையில், தமிழக அரசு பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 50 சதவீதமாகவும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமாகவும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைக் குறைத்து அரசாணை வெளியிட்டது.

இந்தச் சிறப்பு அரசாணையின் அடிப்படையில் கடந்த ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 2,17,519 ஆசிரியர்கள் எழுதிய நிலையில், 1,08,326 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்; அதாவது சுமார் 1.09 லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்தனர். குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1 தேர்வில் 80 சதவீதப் பதிவாகியிருந்தாலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வில் வெறும் 38 சதவீதமே தேர்ச்சி விகிதம் பதிவானது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜூலை மாதத் தேர்வில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தோல்வியடைந்ததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான சூழல் உருவானது.

இதனைக் கருத்தில் கொண்டு, தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் வரும் டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு சிறப்பு ‘டெட்’ தேர்வு நடத்தப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை தற்போது தீர்மானித்துள்ளது. இந்தத் தேர்வை ஆசிரியர்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் வகையில், பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படாதபடி சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலமாகச் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 31-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தீவிரப் பயிற்சி வகுப்புகள் ஆசிரியர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author