NIRF தரவரிசை 2024: தொடர்ந்து 6வது வருடமாக முதலிடம் பிடித்த ஐஐடி மெட்ராஸ்  

Estimated read time 1 min read

தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (என்ஐஆர்எஃப்) தரவரிசை 2024ஐ கல்வி மற்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் இன்று வெளியிட்டார்.
NIRF இன் அதிகாரப்பூர்வ இணையதளமான nirfindia.org இல் தரவரிசைகளை அணுகலாம். அந்த தரவரிசை பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக முதல் இடத்தில் ஐஐடி-மெட்ராஸ் இடம்பெற்றுள்ளது.
என்ஐஆர்எஃப் தரவரிசையில் ‘ஒட்டுமொத்தம்’ மற்றும் ‘பொறியியல்’ ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஐஐடி மெட்ராஸ் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக்கொள்வது இது ஆறாவது ஆண்டாகும்.
இந்த ஆண்டு, தரவரிசையின் ஒன்பதாவது பதிப்பில், 10,885 நிறுவனங்கள் NIRF தரவரிசை கட்டமைப்பில் பங்கேற்றன.
இது 2016 இல் முதல் பதிப்பில் இருந்து இந்த ஆண்டு இந்த தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை 200% அதிகரித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author