அதிபர் தேர்தலில் இருந்து விலக ஒப்புக்கொண்டாரா ஜோ பைடன்? அடுத்து என்ன?  

டைம்ஸ் நவ் வெளியுள்ள ஒரு அறிக்கையின் படி, 2024 அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலக ஜோ பைடன் ஒப்புக்கொண்டதாக தெரியவந்துள்ளது.

தொடர் உடல்நல பிரச்சனைகள், பொதுமக்களிடேயே குறைந்த அபிமானம் மற்றும் வயது (பைடேனின் வயது 81) காரணமாக அவர் இந்த முடிவை எடுத்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

எனினும் அமெரிக்கா ஊடகமான நியூஸ்மேக்ஸின் ஹல்பெரின் கூற்றுப்படி, துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது வாரிசாக நிறுத்த பைடன் ஒப்புதல் அளிக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடத்தப்பட்டுள்ளது.

மேலும் சில ஆதரங்கள்படி, இந்த வார இறுதியில் பைடன் தனது முடிவை அறிவிக்கலாம் என்று கூறுகின்றன.

You May Also Like

More From Author