சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பெல்ஜியத்தின் மன்னர் ஃபிலிப்பும் இரு நாட்டுறவு நிறுவப்பட்ட 55ஆவது ஆண்டு நிறைவையொட்டி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.
ஷிச்சின்பிங் தனது வாழ்த்து செய்தியில் கூறுகையில், கடந்த 55 ஆண்டுகளில் இரு நாட்டுறவு நிலையாக வளர்ந்துள்ளது. பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புகளில் நிறைய சாதனைகளைப் பெறுவதோடு, இரு நாட்டு மக்களின் தொடர்பும் மென்மேலும் நெருக்கமாகியுள்ளது. சீன-பெல்ஜிய உறவின் வளர்ச்சிக்கு நான் மிகவும் கவனம் செலுத்துகிறேன். மன்னர் ஃபிலிப்புடன் இணைந்து இரு நாட்டு பன்முக நட்பு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவைப் புதிய நிலைக்கு எடுத்துச் செல்லவும், சீன-ஐரோப்பிய உறவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குப் புதிய பங்காற்றவும் விரும்புகிறேன் என்றார்.
சீனாவுடன் ஒன்றுக்கொன்று நலன் அளிக்கும் சரிசமமான உறவை வளர்த்து உலகின் அறைகூவல்களைக் கூட்டாகச் சமாளித்து அமைதி, நிதானம் மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்ற பெல்ஜியம் விரும்புவதாக மன்னர் ஃபிலிப்பு தெரிவித்தார்.
