மத்திய கிழக்குப் பிரச்சினைக்கான சீனச் சிறப்புத் தூதர் இளவரசர் க்ஹலிட் உடன் சந்திப்பு

மத்திய கிழக்குப் பிரச்சினைக்கான சீன அரசின் சிறப்புத் தூதர் ஜெய்ஜூவேன், சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள சௌதி அரேபிய வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகரான இளவரசர் க்ஹலிட் உடன் அக்டோபர் 21ஆம் நாள் பெய்ஜிங்கில் சந்தித்து இரு நாட்டுறவு, மத்திய கிழக்கு நிலைமை உள்ளிட்டவை குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.

அப்போது, ஜெய்ஜூவேன் கூறுகையில், சௌதி அரேபியா உள்ளிட்ட பிரதேச நாடுகள் சொந்த நாட்டின் இறையாண்மைப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கும் பேச்சுவாத்தையின் மூலம் கருத்து வேற்றுமைகளைத் தீர்ப்பதற்கும் சீனா ஆதவளிக்கும். மேலும், பிரதேசத்தின் அமைதியைக் கூடிய விரைவில் மீட்டெடுக்க விரும்புவதாகவும் என்றார்.

பிரதேச விவகாரங்களில் நியாயமான பங்களிப்பை ஆற்றியுள்ள சீனாவுக்கு க்ஹலிட் பாராட்டு தெரிவித்தார். சீனாவுடன் பரிமாற்றத்தை வலுப்படுத்தி பிரதேசத்தின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்கும் பொருட்டு, தொடர்ந்து பாடுபட விரும்புவதாக அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author