2024ஆம் ஆண்டின் இறுதி வரை, 14ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் காலத்தில் சீனாவின் விளையாட்டு வீரர்கள் மொத்தமாக 519 உலக சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளனர்.
68 புதிய உலக பதிவுகளை உருவாக்கினர் என்று சீனத் தேசிய விளையாட்டுத் தலைமைப் பணியகத்தின் தலைவர் கௌட்சிதேன் 19ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார்.
மேலும், 14ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் பொது மக்களின் உடற்பயிற்சியிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் சீனா வல்லரசு என்ற புதிய தோற்றத்தைக் காட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டில் இணைய வழி மூலம் வெளிப்புற விளையாட்டிற்கான நுகர்வோர் எண்ணிக்கை 20கோடியை எட்டியது. மொத்த நுகர்வுத் தொகை 30ஆயிரம் கோடி யுவானைத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.