சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் ஆகஸ்ட் 19ஆம் நாள் உயர் தர வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற தலைப்பில் தொடர்பான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. சீனத் தேசிய குடியேறுவோர் நிர்வாகத்தின் துணைத் தலைவர் லியு ஹை டாவோ கூறுகையில், இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை சீனாவின் பல்வேறு நுழைவாயில்களின் மூலம் 1 கோடியே 72 இலட்சத்து 54 ஆயிரம் வெளிநாட்டினர் நுழைந்தனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 129.9 விழுக்காடு அதிகமாகும். 8 இலட்சத்து 46 ஆயிரம் நுழைவாயில் விசாக்கள் வழங்கப்பட்டன. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 182.9 விழுக்காடு அதிகமாகும். சீனாவின் சுற்றுலா சந்தை மென்மேலும் சுறுச்சுறுப்பாக இருப்பது மிக குறிப்பிடத்தக்க விளைவாகும். சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 2023ஆம் ஆண்டில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டினரின் சராசரி தினசரி நுகர்வு தொகை 3 ஆயிரத்து 459 யுவானாகும். நுகர்வுத் தொகை நேரடியாக 10 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.