2ஆவது அணு ஆற்றல் உச்சிமாநாட்டில் சீனத் துணை தலைமை அமைச்சர் உரை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமை அமைச்சருமான சாங் கோஜிங் மார்ச்10ஆம் நாள் பாரிஸில் 2ஆவது அணு ஆற்றல் உச்சி மாநாட்டில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார். 

அப்போது அவர் கூறுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த பகுத்தறிவு, ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு முன்னேற்றத்துடன் கூடிய அணு ஆற்றல் கண்ணோட்டத்தில் சீனா எப்போதும் ஊன்றி நின்று வருகிறது. பயனுள்ள நடவடிக்கைகளின் மூலம், உலக அணு ஆற்றல் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றியுள்ளது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, உலக வளர்ச்சி முன்மொழிவு, உலக பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரிக முன்மொழிவு ஆகியவற்றைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி அணு ஆற்றல் பன்னாடுகளின் வளர்ச்சி மற்றும் செழுமைக்கு மேலும் நன்றாக நன்மை படைக்கச் செய்ய வேண்டும் என்றும், மனிதகுலப் பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்துக்கு புதிய பங்களிப்பு ஆற்ற வேண்டும் என்றும் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.  

 

You May Also Like

More From Author