உலகின் முன்னணி வீடியோ பகிர்வு தளமான யூடியூப், செவ்வாய்க்கிழமை அன்று திடீரென உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்தது.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த சேவை தடங்கல் ஏற்பட்டதால், லட்சக்கணக்கான பயனர்கள் வீடியோக்களை பார்ப்பதிலும், பதிவேற்றுவதிலும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நேற்று காலை முதல் யூடியூப் செயலி மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் தொழில்நுட்ப சிக்கல்கள் உணரப்பட்டன.
வீடியோக்கள் லோட் ஆகாமல் இருப்பது, தளம் திறக்கப்படும்போது “Something went wrong” என்ற error செய்தி வருவது போன்ற புகார்களை பயனர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
குறிப்பாக, யூடியூப் டிவியும் (YouTube TV) சில கூகுள் சேவைகளும் இதனுடன் பாதிக்கப்பட்டன.
உலகளாவிய அளவில் முடங்கிய யூடியூப் சேவைகள்: தொழில்நுட்ப கோளாறா?
