மேற்கு வங்கத்தின் நல்பூரில் செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்ஃபாஸ்ட் வாராந்திர எக்ஸ்பிரஸின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு வெளியேறி விபத்து ஏற்பட்டது.
சனிக்கிழமை (நவம்பர் 9) காலை 5:31 மணியளவில் காரக்பூர் டிவிஷனின் நல்பூர் நிலையத்தை கடந்து செல்லும் போது ரயில் தடம் புரண்டது.
இந்திய ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தடம் புரண்ட பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு ரயில்வே கோட்டத்தின் நல்பூர் ரயில் நிலையம் அருகே செகந்திராபாத் ஷாலிமார் எஸ்எஃப் எக்ஸ்பிரஸின் ஒரு பார்சல் வேன் உட்பட மொத்தம் 3 பெட்டிகள் தடம் புரண்டன. இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.” என்று தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து
