தமிழக வெற்றிக் கழகத்தின் எம்.எல்.ஏ-வும், முதலமைச்சர் விஜய் அவர்களின் மிக நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத், தனது அலுவலகத்தில் செய்துள்ள ஒரு அதிரடி காரியம் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது அலுவலகத்தில் கடவுள் படத்தை விடவும் அளவில் பெரியதாகத் தனது நண்பன் விஜய்யின் புகைப்படத்தை அவர் மாட்டி வைத்துள்ளார்.
இப்படி ஒரு நண்பனா..? கடவுளுக்கும் மேல் நண்பன் vijay-ஐ வழிபடும் mla srinath pic.twitter.com/1HYyUWn7mH
— Galatta Media (@galattadotcom) May 20, 2026
அதுமட்டுமன்றி, காலையில் அலுவலகம் வந்தவுடன் முதலில் விஜய் படத்தை வணங்கிவிட்டு, அதன் பிறகுதான் அவர் கடவுளின் படத்தையே கும்பிட்டுள்ளார். இது தொடர்பான காணொளி வெளியாகி செம வைரலாகி வரும் நிலையில், “கடவுளுக்கு மேலாகத் தனது உண்மையான நண்பன் விஜய்யை வைத்துப் பார்க்கிறார் ஸ்ரீநாத்” எனத் தமிழக வெற்றிக் கழகத்தினர் இந்த வீடியோவை சோசியல் மீடியாக்களில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டி வருகின்றனர்
