“தீபாவளி ஷாப்பிங் போறீங்களா?”.. சென்னையின் தற்போதைய நிலவரம் இதுதான்.. டிரோன் மூலம் கண்காணிக்கும் போலீஸ்..!!! 

Estimated read time 0 min read

தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 8ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் பண்டிகை கால ஷாப்பிங் களைகட்டத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தி.நகர் ரங்கநாதன் தெருவில் புத்தாடைகள், பட்டாசுகள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. தெருவின் எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் கூட்டமாக இருப்பதால் அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. தி.நகர் ஜவுளிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்குத் தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கடைகளிலும் புத்தாடைகள் மற்றும் பண்டிகைப் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. வார இறுதி நாட்கள் என்பதால் ஷாப்பிங் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ரங்கநாதன் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

இதற்கிடையே, பொதுமக்களின் பாதுகாப்புக்காக சென்னை காவல்துறை சார்பில் பலத்த கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 150 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பிக்பாக்கெட் மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கவும் டிரோன் கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ரங்கநாதன் தெரு மற்றும் சுற்றுவட்டாரங்களில் 9 கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி நெருங்க நெருங்க கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்பதால் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author