இன்று ஒரே நாளில் அரசுக்கு ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு

Estimated read time 1 min read

காலி பாட்டில் திட்டத்தால் இன்று தமிழகம் முழுவதும் கடைகள் மூடல் – அரசுக்கு கோடிகளில் நஷ்டம்

தமிழக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் டாஸ்மாக் ஊழியர்கள் எப்படியாவது குழப்பி, தகராறு பண்ணி, கடையை மூடி அரசுக்கு தலைவலி கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இன்று நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்த காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் அதே கதை தான் நடந்துள்ளது.

இதுவரை மது பாட்டில் வாங்கும் போது MRP-க்கு மேல் தனியாக 10 ரூபாய் வசூலிப்பது, கணக்கு வழக்கு இல்லாமல் ரொக்கமாக கையாள்வது போன்ற முறைகேடுகள் நடப்பதாக புகார் வந்தது. அதை ஒழிக்க அரசு புதிய சட்டம் 13/2026 கொண்டு வந்து, இனி அந்த 10 ரூபாய் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நல வரி* என்ற பெயரில் MRP-க்குள்ளேயே சேர்க்கப்படும். குடிமகன் காலி பாட்டிலை எந்த கடையில் கொடுத்தாலும் 10 ரூபாயை திரும்ப பெறலாம் என்று தெளிவாக அறிவித்தது. QR Code வைத்து பாட்டிலை சரிபார்த்து பணம் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

“காலி மது பாட்டிலை வாங்க முடியாது, QR Code ஸ்கேன் ஆகல, இடம் இல்ல, ஆள் இல்ல” என்று காரணம் சொல்லி தமிழகம் முழுவதும் இன்று பல கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாட்டில் கொடுப்பது ஊழியர்கள் வேலை தான், ஆனால் வாங்க மாட்டேன் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள். இதனால் இன்று ஒரு நாள் மட்டும் அரசுக்கு ரூ.100 கோடி முதல் ரூ.150 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமை விற்பனை தான் உச்சத்தில் இருக்கும், அன்று பார்த்து கடையை மூடியிருப்பது பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author