மனிதரை ஏற்றிச்செல்லும் சந்திர மண்டல ஆய்வுக்கான சீனாவின் புதிய திட்டம்

Estimated read time 0 min read

7ஆவது மனித விண்வெளி மாநாடு கடந்த சனிக்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. இதில் சீனாவின் சந்திர மண்டலப் பயணத் திட்டத்தின் பல்வேறு ஆய்வு மற்றும் கட்டுமானப் பணிகள் சீராகவும் சுமுகமாகவும் நடைபெற்று வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

இது பற்றி சீன மனித விண்வெளித் திட்டப்பணிக்கான துணைத் தலைமை வடிவமைப்பாளரும் சந்திர மண்டல ஆய்வுத் திட்டப்பணியின் தலைமை வடிவமைப்பாளருமான வாங் சியாங் கூறுகையில், லான்யுயே எனும் சந்திர மண்டல லேண்டர் சாதனமும் மங்சோ எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்வெளி ஓடமும் முறையே இரண்டு ராக்கெட்டுகளின் மூலம் புவிக்கோள—சந்திர மாற்றுப் பாதைக்கு அனுப்பப்படும். இரண்டு கலங்கள் சந்திர சுற்று வட்டப் பாதையில் இணையும். பிறகு, விண்வெளி வீரர்கள் மங்சோ விண்வெளி ஓடத்திலிருந்து லான்யுயே லேண்டர் சாதனத்துக்குள் நுழைந்து சந்திரத் தரையிறங்கி, தொடர்புடைய அறிவியல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வர் என்று தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author