சென்னையில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றுவருகிறது. இதில் அமைப்பு ரீதியாக உள்ள 84 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை. கட்சி வளர்ச்சி பணி, மாவட்ட செயலாளர்கள் செயல்பாடு, 2 தொகுதி இடைத்தேர்தல் தோல்வி, எதிர்வரும் 5 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.
